/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி கோர்ட் நிபந்தனை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி கோர்ட் நிபந்தனை உயர்நீதிமன்றம் நிபந்தனை
ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி கோர்ட் நிபந்தனை உயர்நீதிமன்றம் நிபந்தனை
ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி கோர்ட் நிபந்தனை உயர்நீதிமன்றம் நிபந்தனை
ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி கோர்ட் நிபந்தனை உயர்நீதிமன்றம் நிபந்தனை
ADDED : ஜூன் 05, 2025 03:07 AM
மதுரை:மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிடக்கோரி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலாகின.
நீதிபதி பி.புகழேந்தி: சமூக ஊடக காலகட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்படுகிறது. அதிக பணம் செலவு செய்து ஆடல், பாடல் நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் செயலர்களிடம் மனுதாரர்கள் தரப்பில் தலா ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இத்தொகையை அக்கிராமங்களிலுள்ள நீர்நிலைகளை துார்வார பயன்படுத்த வேண்டும். இதனால் கிராமங்கள் பயனடையும். நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் போலீசார் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.