/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
ADDED : மே 14, 2025 04:56 AM
எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருவேங்கடப் பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்காக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், திருவேங்கடபெருமாள் பூத வாகனத்திலும் புறப்பாடாகி, எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர். மண்டகப்படியில் தங்கி நேற்று முன்தினம் இரவு முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு நகர்வலமாக வந்து, அங்கு எதிர்சேவை நடந்தது.