ADDED : ஜூன் 18, 2025 04:23 AM
மதுரை: மதுரை சர்வேயர் காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் 2 நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் அரசு தாழ்தள சொகுசு பஸ்சை கைநீட்டி நிறுத்தினார்.
பஸ் ஸ்டாப்பை அடுத்துள்ள சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததால் சிக்னலை கடந்து செல்ல பஸ் முயன்றது. இதுதொடர்பாக நடத்துனருக்கும், இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நிகழ்வின் வீடியோ வைரலானது. நடத்துனர் ரவியை 'சஸ்பெண்ட்' செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டது.