ADDED : மார் 16, 2025 06:19 AM

மதுரை; உரிய ஊதியம் வழங்ககோரி மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இணைப்பேராசிரியர் உள்ளிட்ட பணி மேம்பாட்டிற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து 4 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசாணை எண் 5-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், நியாயமான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இணைப்பேராசிரியர் பணிமேம்பாட்டிற்கு முனைவர் பட்டம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி., மூட்டா சார்பில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் சாலை மறியல் நடந்தது.
பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். பெண்கள் உட்பட நுாற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.