Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலெக்டர் பொறுப்பேற்பு

கலெக்டர் பொறுப்பேற்பு

கலெக்டர் பொறுப்பேற்பு

கலெக்டர் பொறுப்பேற்பு

ADDED : ஜூன் 26, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை கலெக்டராக இருந்த சங்கீதா, சமூகநலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இவருக்கு பதில் கே.ஜே. பிரவீன்குமார் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன் சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை கமிஷனராக இருந்தார்.

2017 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரவீன்குமார், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்றபின், கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உதவி கலெக்டர், ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் கலெக்டர், மதுரை மாநகராட்சி கமிஷனராக பதவி வகித்துள்ளார்.

புதிய கலெக்டருக்கு டி.ஆர்.ஓ., அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், பி.ஆர்.ஓ., சாலிதளபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us