ADDED : மே 10, 2025 06:07 AM
மதுரை; தேசிய மின்னணு சந்தை எனப்படும் இ - நாம் திட்டத்தின் கீழ் ஏப்.1 முதல் நேற்று (மே 9) வரை 288 விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகத்தின் மூலம் ரூ.98.23 லட்சம் பயனடைந்துள்ளதாக வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் நடந்த ஏல விற்பனை குறித்து கூறுகையில் ''வாரத்தில் செவ்வாய், வெள்ளியில் ஏல விற்பனை நடக்கிறது. ஏப். 1 முதல் மே 9 வரையான ஏல நாட்களில் 8960 கிலோ கொப்பரை விற்கப்பட்டுள்ளது.
5 லட்சத்து 15 ஆயிரம் தேங்காய்கள் விற்பனை சேர்த்து மொத்தம் ரூ.98.23 லட்சம் பெற்று 288 விவசாயிகள் பயனடைந்தனர்'' என்றார்.
மதுரை விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, கண்காணிப்பாளர்கள் நாகமூர்த்தி, கோகிலா ஏற்பாடுகளை செய்தனர்.