/உள்ளூர் செய்திகள்/மதுரை/சிட்டி பேனர்----இழுத்தடிக்காதீங்க சம்பளத்தை...சிட்டி பேனர்----இழுத்தடிக்காதீங்க சம்பளத்தை...
சிட்டி பேனர்----இழுத்தடிக்காதீங்க சம்பளத்தை...
சிட்டி பேனர்----இழுத்தடிக்காதீங்க சம்பளத்தை...
சிட்டி பேனர்----இழுத்தடிக்காதீங்க சம்பளத்தை...
ADDED : ஜூன் 18, 2024 05:06 AM
இப்பல்கலைக்கு உட்பட்டு 90க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. கல்லுாரிகளில் நடக்கும் பருவத் தேர்வுகளின் விடைத்தாள்களை பல்கலையில் திருத்துவது வழக்கம். அதற்கான முகாமில் அனைத்து கல்லுாரிகளைச் சேர்ந்த உதவி, இணை பேராசிரியர்கள் விருப்பம், தகுதி அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுவர்.
கடைசியாக 2023, ஏப்ரல் தேர்வுகளுக்கான முகாம் 2024 பிப்ரவரி முதல் வாரம் துவங்கி இறுதியில் முடிந்தது. இதில் யு.ஜி.,யில் 1000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், பி.ஜி.,யில் 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் பணியில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் ஒருவருக்கு யு.ஜி.,யில் ஒரு விடைத்தாள் திருத்த தலா ரூ.12, பி.ஜி.,க்கு தலா ரூ.15, அத்துடன் ஒரு நாள் டி.ஏ., ரூ.150 முதல் 250 வரை வழங்கப்படும்.
ஒருவர் நாள் ஒன்றுக்கு 54 விடைத்தாள்கள் திருத்தி மதிப்பீடு செய்தனர். இம்முகாம் முடிந்து 4 மாதங்களாகியும் இதுவரை அதற்கான சம்பளம் பல்கலையால் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்புக்கு முன் விடைத்தாள் திருத்தும் முகாமில் பங்கேற்போருக்கு முகாம் நிறைவடையும் நாளில் சம்பளம், அதற்கான டி.ஏ.,க்கள் கணக்கிட்ட கையோடு ரொக்க தொகை வழங்கப்படும். கொரோனாவால் ஆன்லைனில் விடைத்தாள் திருத்தம் நடந்தது. அப்போது திருத்தியவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கொரோனாவிற்கு பின் தற்போது நேரடியாக விடைத்தாள் திருத்தப்படுகின்றன. ஆனாலும் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகின்றன. சம்பளம் வழங்காதது குறித்து கேட்டால் 'பல்கலையில் நிதியில்லை' என்கின்றனர். இப்பணம் பல்கலையில் இருந்து தரப்படுவது அல்ல. பருவத் தேர்வுக்காக கல்லுாரி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து தான் வழங்கப்படுகிறது. எனவே நிதியில்லை என்பது சரியல்ல. விடைத்தாள் திருத்த சம்பளத்தை இனியும் இழுத்தடிக்காமல் உடனே வழங்க பல்கலை கன்வீனர் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.