Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நஷ்டத்தில் இயங்கும் ஆவின் கிளைகளை ஒன்றிணைக்க வேண்டும்

நஷ்டத்தில் இயங்கும் ஆவின் கிளைகளை ஒன்றிணைக்க வேண்டும்

நஷ்டத்தில் இயங்கும் ஆவின் கிளைகளை ஒன்றிணைக்க வேண்டும்

நஷ்டத்தில் இயங்கும் ஆவின் கிளைகளை ஒன்றிணைக்க வேண்டும்

ADDED : ஜூன் 10, 2024 05:35 AM


Google News
மதுரையை தலைமையிடமாக கொண்டு ஒன்றாக இருந்த இந்த ஒன்றியங்கள், தேனியிலும் 'ஆவின் சேர்மன்' பதவியை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் காரணத்திற்காக 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் தேனி ஆவின் ஒன்றியம் என தனியாக பிரிக்கப்பட்டது.

ஆனால் அங்கு எதிர்பார்த்த பால் கொள்முதல், விற்பனை நடக்கவில்லை. ஆனால் அதிகாரிகள், தொழிலாளர்கள் எண்ணிக்கையோ தேவைக்கு மேல் உள்ளது. இதனால் நஷ்டத்தை நோக்கி நிர்வாகம் செல்வதாக சர்ச்சை எழுந்தது.

சமீபத்தில் தஞ்சையில் இருந்து திருவாரூர் ஆவின் என தனியாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வாறு பிரித்தால் இரண்டு மாவட்ட ஆவின் ஒன்றியங்களிலும் தேவையில்லாத கூடுதல் செலவு ஏற்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அத்திட்டத்தை அரசு கைவிட்டது.

இதை முன்னுதாரணமாக வைத்து மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து நேற்று மதுரை வந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் மதுரை மாவட்ட ஆவின் ஓய்வுபெற்றோர் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பொருளாளர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகளும் மனு அளித்தனர்.

ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: மதுரை ஆவினில் தற்போது தினமும் 1.60 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதலும், 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனையும் நடக்கிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் தினமும் 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலும், 7 ஆயிரம் லிட்டர் விற்பனை என்ற அளவில்தான் உள்ளது. இதனால் கொள்முதல் செய்த பால், மதுரை உள்ளிட்ட பிற ஒன்றியங்களுக்கும், சில நேரம் கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது.

அதேநேரம் மதுரையை விட தேனி ஆவின் ஒன்றியத்தில் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை பலம் அதிகம். இவற்றை ஒன்றாக இணைத்தால் பால் கொள்முதல், விற்பனை என இரண்டுமே அதிகரிக்கும்.

மேலும் பொது மேலாளர், மேலாளர் (அட்மின்), உதவி பொது மேலாளர்கள் உள்ளிட்ட ஏராள பணியிடங்கள் நீக்கப்படும். இதன் மூலம் செலவினங்கள் குறையும். தமிழகம் முழுவதும் இதுபோல் பிரிக்கப்பட்ட திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஆவின்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. விற்பனை குறைவாக உள்ள ஆவின்களை மீண்டும் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us