/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் இன்று மாலை முதல்வர் 'ரோடு ஷோ': ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம் மதுரையில் இன்று மாலை முதல்வர் 'ரோடு ஷோ': ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்
மதுரையில் இன்று மாலை முதல்வர் 'ரோடு ஷோ': ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்
மதுரையில் இன்று மாலை முதல்வர் 'ரோடு ஷோ': ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்
மதுரையில் இன்று மாலை முதல்வர் 'ரோடு ஷோ': ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்

பழங்காநத்தம் ரவுண்டானா முதல் காளவாசல் சந்திப்பு வரை
கப்பலுார் ரிங் ரோட்டிலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்களுக்கு இன்று மதியம் 1:00 மணி முதல் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் கூத்தியார் குண்டு பாலம் வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு, சமயநல்லுார் ரிங் ரோடு வழியாக பாத்திமா கல்லுாரி ரவுண்டானா, ஆனையூர் வழியாக செல்ல வேண்டும்.
குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வரை
சமயநல்லுார் ரிங் ரோட்டிலிருந்து பாத்திமா கல்லுாரி, குரு தியேட்டர் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் பாத்திமா கல்லுாரி சந்திப்பு, தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் பாலம் சந்திப்பு. அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
முன்னாள் மேயர் முத்து சிலை திறப்புக்கு பின் சர்க்கியூட் ஹவுஸிற்கு முதல்வர் செல்லும் வரை
அரசரடி சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வழியாக சிம்மக்கல் வழியாக கோரிப்பாளையம் பகுதிக்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டி.பி. ரோடு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெற்குமாரட் வீதி, கீழவாசல் சந்திப்பு, -காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.