ADDED : செப் 11, 2025 05:17 AM
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
பள்ளிப் போட்டி முடிவுகள்: ஹாக்கியில் இந்திராகாந்தி பள்ளி முதலிடம், அமெரிக்கன் கல்லுாரிப் பள்ளி 2ம் இடம், வாடிப்பட்டி அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன. ஹேண்ட்பால் போட்டியில் தனபால் பள்ளி முதலிடம், சீதாலட்சுமி பள்ளி 2ம் இடம், ஓம் சாதனா பள்ளி 3ம் இடம் பெற்றன.
அரசு ஊழியர்களுக்கான ஆடவர் வாலிபால் போட்டியில் மதுரை சிட்டி போலீஸ் அணி முதலிடம், மதுரை சிறப்பு போலீஸ் அணி 2ம் இடம், சாம்பியன்ஸ் வாலிபால் அணி 3ம் இடம் பெற்றன. கபடி போட்டியில் ஆறாவது பட்டாலியன் ஏ அணி முதலிடம், ஆயுதப்படை பிரிவு அணி 2ம் இடம், ஆறாவது பட்டாலியன் பி அணி 3ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு வாலிபால் போட்டியில் அடேங்கப்பா எட்டு பேரு அணி முதலிடம், மதுரை சிறப்பு போலீஸ் அணி 2ம் இடம், எம்.எம்.சி., அணி 3ம் இடம் பெற்றன. கபடி போட்டியில் பத்தாவது பட்டாலியன் அணி முதலிடம், அரசு உடற்கல்வித்துறை அணி 2ம் இடம், பத்தாவது பட்டாலியன் அணி 3ம் இடம் பெற்றன.
ஏற்பாடுகளை ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன் செய்தனர்.