ADDED : ஜூன் 15, 2025 06:56 AM
மதுரை, : மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளி சார்பில் தில்லைநாயகம் நுாற்றாண்டு விழா சங்க வளாகத்தில் நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார்.
சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார். கல்வியாளர் அரிஅரலேலன் 'தில்லைநாயகத்தின் நுாலகத் தமிழ்' எனும் தலைப்பில் பேசினார். மதுரை காமராஜ் பல்கலை நுாலகத் தகவல் அறிவியல் துறை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீமுருகன் 'தமிழாய்விற்கான நுண்ணறிவுக் கருவி கள்' என்ற தலைப்பில் பேசினார்.