/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ADDED : ஜூன் 02, 2025 11:14 PM
மதுரை: சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முறைப்படி பிரம்மோற்ஸவம் விழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும்.
ஆனால் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை மட்டுமே நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. விழாவை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: பிரம்மோற்ஸவ விழாவை 6 ஆண்டுகளாக நடத்தவில்லை என்கிறீர்கள். தற்போது கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். முன்கூட்டியே மனு செய்திருக்கலாமே.
மனுதாரர் தரப்பு: தற்போதுதான் விபரம் தெரியவந்தது.
கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன்.
நீதிபதிகள்: கோயில் நிர்வாகம் தரப்பில் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று இன்று (ஜூன் 3) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.