ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
ADDED : மே 14, 2025 04:48 AM

மதுரை : மதுரை சிக்கந்தர் சாவடி கோபி கண்ணன் 47.
கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று இரவு 7:50 மணிக்கு தனது காரில் நத்தம் ரோட்டில் உள்ள எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே சென்ற போது பேனட்டில் இருந்து புகை வந்ததை கவனித்து கீழே இறங்கினார். அதன் தொடர்ச்சியாக காரில் பற்றிய தீயை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.