ADDED : ஜன 08, 2025 05:44 AM
மேலுார் : கிடாரிப்பட்டி மற்றும் கருங்காலக்குடி ஊராட்சி தலைவர்கள் ஹேமலதா, பீர்முகமது.
இப்பகுதியில் குற்றங்களை தடுக்க 26 கண்காணிப்பு கேமராக்களை பஸ் ஸ்டாப் உட்பட முக்கிய இடங்களில் பொருத்தினர்.
இப்பணிகளை துவக்கி வைத்து டி.எஸ்.பி., சிவக்குமார் கூறுகையில், ''அனைத்து கேமராக்களின் இணைப்பையும் கட்டுப்பாட்டு அறையில் போலீசார் மூலம் கண்காணித்து குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.
மேலுார், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர்கள் சிவசக்தி, ஜெயந்தி, தனியார் நிறுவன நிர்வாகி பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர்.