ADDED : ஜூன் 22, 2025 03:08 AM

சோழவந்தான்: சோழவந்தான் சுற்று வட்டார பகுதி மின் கம்பங்களில் தனியார் கேபிள் ஒயர்கள் ஆக்கிரமித்துள்ளன.
இவை தாழ்வாகவும் அதிக அளவில் நெருக்கமாகச் சென்று வலை போன்ற அமைப்பைஏற்படுத்துகின்றன.
இதனால் காட்டுக்குள் வளரும் செடி, கொடிகள் இவற்றின் மீது பற்றி படர்ந்து மின்கம்பங்களை ஆக்கிரமிக்கின்றன. இதனால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஆங்காங்கே கொத்து கொத்தாக கேபிள்கள் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ளன.
இதனால் மின்வாரிய ஊழியர்கள் ஏறி வேலை செய்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கேபிள்களை அகற்ற வேண்டும்.