ADDED : செப் 06, 2025 04:21 AM

மேலுார்: எஸ்.கல்லம்பட்டியில் கழுவம்பாறை சுவாமி கோயில் காளை நினைவாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 19 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் புலி மலைப்பட்டி தஷ்விகா, நரசிங்கம்பட்டி அகமகிழன், வல்லாளபட்டி கக்கத்தாள், சின்ன மாங்குளம் அழகு மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.
சிறிய மாடு பந்தயத்தில் 41 ஜோடிகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
உறங்கான்பட்டி ராவணன், கல்லல் உடையப்பா சக்தி முதல் பரிசையும், சாத்தமங்கலம் பசும்பொன்,கல்லம்பட்டி ஷேக் 2ம் பரிசையும், கார்த்திகேயன் சூரக்குண்டு, மாத்துார் பொன்னையா 3ம் பரிசையும், நரசிங்கம்பட்டி அகமகிழன், பண்ணைபுரம், சாமிபாலாஜி 4ம் பரிசையும் வென்றனர்.