Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.23 முதல் பிரம்மோற்ஸவ விழா அக்.2ல் தேரோட்டம்

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.23 முதல் பிரம்மோற்ஸவ விழா அக்.2ல் தேரோட்டம்

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.23 முதல் பிரம்மோற்ஸவ விழா அக்.2ல் தேரோட்டம்

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.23 முதல் பிரம்மோற்ஸவ விழா அக்.2ல் தேரோட்டம்

ADDED : செப் 15, 2025 03:52 AM


Google News
மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உப கோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், செப். 23 முதல் அக். 5 வரை புரட்டாசி மாத பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது.

செப். 23 மாலை 5:30 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது. செப். 24 காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கொடியேற்றப்பட்டு, காலை 10:15 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் ரதத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டப்படுகிறது.

செப். 25 முதல் அக். 1 வரை தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு, அனுமார், கருடன், சேஷன் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன.

தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாக, அக். 2 காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் தேரில் பெருமாள் எழுந்தருள்கிறார். காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. அக். 3ல் பூச்சப்பரம்,அக். 4 காலை 6:50 மணிக்கு மேல் 7:10 மணிக்குள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். அன்று காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்ளும், மாலை 6:00 மணிக்கு மேலும்தெப்ப உற்ஸவம் நடக்கிறது.

அக். 5ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞநாராயணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us