ADDED : செப் 22, 2025 03:56 AM
மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரியில் 'மீனாட்சி கோயில்- கலையழகு கற்சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள் ' என்ற புத்தக வெளியீட்டு விழா தொழிலதிபர் ராமச்சந்திரகுமார் தலைமையில் நடந்தது.
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா புத்தகத்தின் தமிழ் பதிப்பை வெளியிட, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பெற்றார். ஆங்கிலப்பதிப்பான 'மதுரை மீனாட்சி டெம்பிள்' என்ற புத்தகத்தை தியாகராஜர் கல்லுாரி தலைவர் உமா கண்ணன் வெளியிட, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பெற்றார்.
இன்டாக் அமைப்பு நிறுவனர் அரவிந்த் குமார் சங்கர், அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன், அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முத்துராஜா பங்கேற்றனர். புத்தக ஆசிரியர் ரத்தின பாஸ்கர் நன்றி கூறினார்.