ADDED : மே 30, 2025 03:52 AM
மேலுார்: மேலுாரில் பா.ஜ., சார்பில் சிந்துார் ஆப்பரேஷனில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஊர்வலம் நடந்தது.
நகர் தலைவர் இளமுருகன், நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, செந்தில் கிருஷ்ணன், சேவுகபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்டை அடைந்தனர்.
அங்கு பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷமிட்டனர்.