/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'முதல் மரியாதை' பிரச்னையால் அழகர் புறப்படுவதில் தாமதம் 'முதல் மரியாதை' பிரச்னையால் அழகர் புறப்படுவதில் தாமதம்
'முதல் மரியாதை' பிரச்னையால் அழகர் புறப்படுவதில் தாமதம்
'முதல் மரியாதை' பிரச்னையால் அழகர் புறப்படுவதில் தாமதம்
'முதல் மரியாதை' பிரச்னையால் அழகர் புறப்படுவதில் தாமதம்
ADDED : மே 13, 2025 11:43 PM

மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் நேற்று வைகையாறு தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் அழகர் எழுந்தருளிய நிலையில் 'யாருக்கு முதல் மரியாதை' என்ற பிரச்னையால் சுவாமி புறப்பாடு 20 நிமிடங்கள் தாமதமானது.
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8ல் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தங்கக்குதிரையில் அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார். நேற்று காலை ஏகாந்த சேவையில் எழுந்தருளினார். பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் அலங்காரத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றின் தேனுார் மண்டபத்திற்கு வந்தார்.
மதியம் கருடவாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்தார். இதைதொடர்ந்து சுவாமி புறப்படும் நிலையில் தேனுார் மண்டகப்படியில் முதல் மரியாதை தருவது தொடர்பாக சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'ஏற்கனவே இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அறநிலையத்துறை மண்டல துணைகமிஷனர்தான் முடிவு செய்ய வேண்டும்' என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 20 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்ஸ்பெக்டரால் சர்ச்சை
கருடவாகனத்தில் எழுந்தருளிய அழகரை தரிசிக்க பலரும் காலணி அணிந்து தேனுார் மண்டபத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து, காலணி இல்லாமல் செல்ல அனுமதித்தனர்.
அதேசமயம் மண்டபத்தில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவர் சுவாமி அருகில் ஷூ அணிந்து ஒழுங்குபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.