ADDED : ஜூன் 28, 2025 12:57 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் வளர்மதி துவக்கி வைத்தார். போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல்குமார் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், எஸ்.ஐ.,க்கள் பழனி, சிவக்குமார், துரைமுருகன், பள்ளித் தாளாளர் சதானந்தம், திரவியம் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ஜஸ்டின் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன், சக்கரவர்த்தி, சதீஷ்,
புவனேஸ்வரன், உட்பட பலர் விழிப்புணர்வு அட்டையை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.