Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வேண்டும் விழிப்புணர்வு : மதுரை மருத்துவ கல்லுாரிக்கு உடல்தானம்

வேண்டும் விழிப்புணர்வு : மதுரை மருத்துவ கல்லுாரிக்கு உடல்தானம்

வேண்டும் விழிப்புணர்வு : மதுரை மருத்துவ கல்லுாரிக்கு உடல்தானம்

வேண்டும் விழிப்புணர்வு : மதுரை மருத்துவ கல்லுாரிக்கு உடல்தானம்

ADDED : மே 29, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மருத்துவ ரீதியான காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் படிப்புக்கு தானமாக வழங்கலாம்.

ரோட்டில் இறந்து கிடக்கும் ஆதரவற்றோர் உடலை அடையாளம் கண்டு உறவினர்கள் வாங்காத நிலையில், அவற்றையும் போலீசார் மூலம் தானமாக தரலாம்.

தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக பெறப்படும் உடல்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் சுயவிருப்பத்தின் பேரில் தானம் செய்வோர் குறைவு என்கிறார் மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணன்.

அவர் கூறியதாவது: இறந்த பின் கண்தானம் செய்வதற்கு உயிரோடிருக்கும் போதே அதற்கான பத்திரத்தில் கையெழுத்திடலாம்.

அதேபோல உடல்தான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடலாம். இயற்கையான மருத்துவ காரணங்களால் இறப்போரின் உடல்கள் தானமாக பெறப்பட்டு மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு ஒப்படைக்கப்படும்.

ஆதரவற்றோர் உடல்களை போலீசார் மூலம் பெறலாம் என 2023ல் அறிவித்தபோது அந்த ஆண்டில் மட்டும் 23 உடல்கள் பெறப்பட்டன.

2024ல் 7 பெண், 34 ஆண், 2025ல் ஒரு பெண், 10 ஆண் உடல்கள் கிடைத்துள்ளன. போலீசார் மூலம் பெறும் போது அந்தந்த ஸ்டேஷனுக்கான உடல்தான பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறோம்.

மூளைச்சாவு நிலையை அடைந்த பின் உறுப்புகள் தானம் செய்வதைப் போல, உடல் தானம் செய்வதும் ஆராய்ச்சிக்கு உதவும்.

எனவே பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us