ADDED : ஜூன் 14, 2025 05:33 AM
மதுரை: மாவட்ட தொழில் மையம் மதுரை மடீட்சியா வளாகத்தில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சியாம் நாராயணன், மடீட்சியா தொழில் முனைவோருக்கு வழங்கும் சேவைகள் பற்றி விளக்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் அரசு மானியத் திட்டங்கள் குறித்து பேசினார்.
அரசின் ஜெட் சான்றிதழ் பெறுவது குறித்து கார்த்திகேயன், 'எனர்ஜி ஆடிட்டிங்' பற்றி சூரியக்குமார், சோலார் எனர்ஜி பற்றி விக்னேஷ் பேசினர்.
இணைச் செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.