ADDED : ஜன 06, 2024 06:18 AM
மதுரை: தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டின் கட்கா, கோகோ போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜன.21 முதல் 30 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி நடந்தது.
திருக்குறள் ஒப்புவித்தல், கேலோ இந்தியா இளைஞர் திட்ட இலச்சினை, சின்னம் வரைதல் போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மதுரை லேடிடோக், அமெரிக்கன் கல்லுாரி, பொன்முடியார், இளங்கோ மாநகராட்சி பள்ளிகளில் நடந்தன. இதில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் ஜன. 8ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படும்.