ADDED : செப் 03, 2025 05:56 AM
மதுரை : மதுரையில் யூனியன் வங்கி ஊழியர் பணி ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் சார்பில் சங்கக் கூட்டம் நடந்தது. நிர்வாகி வைத்தியநாதன் வரவேற்றார். வங்கியின் மதுரை மண்டல மேலாளர் சபுமோன் பங்கேற்றார்.
பணி ஓய்வு பெற்றோரின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. தலைவர் ரவி, பொதுச் செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் விளக்கம் அளித்தனர். 75 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் காளீஸ்வரன், முத்துவிஜயன் பங்கேற்றனர்.