/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வா தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வா தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்
பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வா தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்
பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வா தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்
பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வா தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்
ADDED : ஜன 11, 2024 04:01 AM
மதுரை : தமிழகத்தில் அடுத்த மாதம் செய்முறை தேர்வு, மார்ச் 1ல் பொதுத் தேர்வு துவங்கவுள்ள நிலையில் கல்வியாண்டின் இறுதியில் ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர்களுக்கு இன்று (ஜன.11) பொது மாறுதல் கலந்தாய்வு நடப்பது விதிமீறல் என சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்து, சம்பள உயர்வு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1.6.2023 ன்படி இத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 350க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இக்கலந்தாய்வு நடக்கவுள்ளது. இந்த கலந்தாய்வால் மாணவர்கள் நலன் பாதிக்கும். கல்வியாண்டு கடைசியில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது ஆசிரியர்களை பழிவாங்கும் மனநிலையில் அதிகாரிகள் உள்ளனர் என்பதையே காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இத்துறை ஆசிரியர், காப்பாளர்கள் கூறியதாவது: கலந்தாய்வு நடக்கும் நாளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் நடத்துவதுதான் நடைமுறை. ஆனால் ஒரு தேதியை நிர்ணயித்து அதற்குள் இருக்கும் காலியிடங்களுக்கு மட்டும் மாறுதல் கலந்தாய்வை நடத்துவது உள்நோக்கம் கொண்டது.
கலந்தாய்வில் காட்டியுள்ள காலியிடங்களில் தொகுப்பூதியத்தில் நியமித்த இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரிக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியருக்கு ரூ.18 ஆயிரம் என சமீபத்தில் தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்தது. அவர்கள் பணி நிலை என்னாகும். மாறுதல் மூலம் அவர்களை நீக்குவது என முடிவு செய்திருந்தால் எதற்காக சம்பள உயர்வு அறிவிக்க வேண்டும்.
பொதுத் தேர்வு மார்ச்சில் துவங்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் மாற்றத்தால் மாணவர்கள் நலன் பாதிக்காதா. இத்துறை ஆசிரியர் நலன்சார்ந்த பல கோரிக்கைகள் இழுத்தடிக்கப்படுகின்றன. ஆனால் மாறுதல் கலந்தாய்வை மட்டும் அதிகாரிகள் நடத்த துடிப்பது ஏன். முதல்வர் ஸ்டாலின் இந்த கலந்தாய்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், கல்வியாண்டு துவக்கத்தில் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றனர்.