/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் நியமனம் மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் நியமனம்
மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் நியமனம்
மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் நியமனம்
மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் நியமனம்
ADDED : ஜூன் 28, 2025 12:54 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, டி.வி.எஸ்., ஆரோக்கியா நிறுவனம் ஒத்துழைப்புடன் 'ரீஆக்ட்' தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் சேர்வதற்கான தேர்வு நடக்கிறது.
நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 21 பேருக்கு ஸ்விக்கி, தாங்க்யூ உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதற்கான பணிநியமனத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டும் அலுவலர் வெங்கடசுப்ரமணியன் முன்னிலையில்தனியார் நிறுவனங்கள் வழங்கின. மேலும் செவித்திறன், கைகால்கள் பாதித்தோருக்கு எம்ப்ராய்டரி, ஆரி திறன்பயிற்சி அளிக்கவும் சிலர் தேர்வாகினர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''முகாமில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலை, கைத்தொழில் பயிற்சி மட்டுமின்றி போட்டித் தேர்வுக்கு தனியார் நிறுவனங்களில் இலவச பயிற்சி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாய்ப்பை பயன்படுத்த மாற்றுத்திறனாளிகள் 87789 45248ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.