ADDED : செப் 10, 2025 08:20 AM
திருமங்கலம்; திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் சுசீலா ராணி செய்திருந்தனர். யாக சாலை பூஜை, அபிஷேகங்களை அர்ச்சகர் சங்கரநாராயண பட்டர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.