முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 04, 2025 05:04 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதாரத்துறை முன்னாள் மாணவர்கள்சங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி செந்தாமரைகண்ணன், சமூக ஆர்வலர் சரவணன், உதவிப்பேராசிரியர் கண்ணபிரான், ஜெயராணி, மாரியப்பன் பங்கேற்றனர்.
பேராசிரியர் முத்துராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். பொருளாதாரத் துறைமுன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணைய 94863 73765ல் தொடர்பு கொள்ளலாம்.