/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமர் - லட்சுமணர் போன்றது அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணி; முன்னாள் அமைச்சர் உதயகுமார் வர்ணனை ராமர் - லட்சுமணர் போன்றது அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணி; முன்னாள் அமைச்சர் உதயகுமார் வர்ணனை
ராமர் - லட்சுமணர் போன்றது அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணி; முன்னாள் அமைச்சர் உதயகுமார் வர்ணனை
ராமர் - லட்சுமணர் போன்றது அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணி; முன்னாள் அமைச்சர் உதயகுமார் வர்ணனை
ராமர் - லட்சுமணர் போன்றது அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணி; முன்னாள் அமைச்சர் உதயகுமார் வர்ணனை
ADDED : செப் 22, 2025 03:16 AM
மதுரை : ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ராமர் -- லட்சுமணர் போன்றது. சக்தி வாய்ந்தது,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தேர்தலின் போது 525 வாக்குறுதிகள் அளித்தார். அதில் பெரும்பாலும் நிறைவேற்ற முடியாதவை. மக்களின் ஆசையை துாண்டும் விதமாக அறிவித்து விட்டு 10 சதவீதத்தை கூட நிறைவேற்ற முடியவில்லை.
தமிழகத்தின் உண்மை நிலவரத்தை மறைக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி திறமையாக செயல்பட்டதால் தான் மத்திய அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களைப் பெற்றுத்தந்தார். தற்போது 39 எம்.பி.,க்களை வைத்திருந்தும் தமிழகத்திற்கு நான்கரை ஆண்டுகளாக சல்லி பைசாவைக் கூட முதல்வர் ஸ்டாலின் பெற்றுத்தரவில்லை. மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை கொண்டு வர அவரால் முடியவில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கென நிரந்தர ஓட்டு வங்கி உள்ளது. ஆனால் தமிழக வெற்றிக்கழக(த.வெ.க.,) தலைவர் விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடலாம் என நினைக்கிறார். தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் தான் போட்டி என விஜய் அறியாமல் பேசுகிறார். தமிழக அரசியல் களத்தில் 75 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., என 2 கட்சிகள் தான் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி உள்ளது.
டில்லியில் அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் பழனிசாமியும் தான் முடிவுகளை எடுப்பர். எங்கள் கூட்டணி ராமர் - லட்சுமணர் போன்றது. தி.மு.க.,வுக்கு தமிழகத்தில் 35 சதவீதமே ஆதரவு உள்ளது. 65 சதவீதம் எதிர்ப்பு தான் உள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் புனித பணியில் பழனிசாமி தொடர்கிறார்.
மதுரையில் கனிமவளங்கள் கொள்ளை போகின்றன. கலெக்டர், எஸ்.பி., போன்றோரிடம் புகார் அளித்தும் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.