/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் விசாக திருவிழா ஏற்பாடு ஆலோசனை குன்றத்தில் விசாக திருவிழா ஏற்பாடு ஆலோசனை
குன்றத்தில் விசாக திருவிழா ஏற்பாடு ஆலோசனை
குன்றத்தில் விசாக திருவிழா ஏற்பாடு ஆலோசனை
குன்றத்தில் விசாக திருவிழா ஏற்பாடு ஆலோசனை
ADDED : ஜூன் 07, 2025 04:41 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 9ல் நடக்கும் வைகாசி விசாக பால்குட திருவிழா சம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., சிவ ஜோதி தலைமை வகித்தார். மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன் முன்னிலை வகித்தனர். வருவாய், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாநகராட்சி, சுகாதாரம், போலீஸ்துறை, கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
கிரிவலப் பாதை சீரமைப்பு, கழிப்பறை வசதி, கிருமி நாசினி தெளித்தல், குப்பைத் தொட்டிகள் வைத்தல், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ரத வீதிகளில் வாகனங்களுக்கு தடை, மருத்துவ வசதிகள், கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்குதல், தீயணைப்பு வாகனம், மின்பணிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆலோசித்தனர்.