ADDED : செப் 04, 2025 04:57 AM
திருமங்கலம்: திருமங்கலம் மம்சாபுரம் 3வது தெரு 100 மீட்டர் நீளம் உள்ளது. இருபுறமும் 20 வீடுகள் உள்ள இத்தெருவில் 7 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 2 வீட்டிற்கும் ஒரு வேகத்தடை உள்ளது.
சோழவந்தான் ரோடு பகுதியில் இருந்து திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், அரசு ஆண்கள் பள்ளி, தொடக்க கல்வி அலுவலகம், முன்சீப் கோர்ட் ரோடு பகுதிகளுக்கு டூவீலரில் வருவோர், மாணவர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். 7 தடைகள் அடுத்தடுத்து உள்ளதால் டூவீலர்களை ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வேகத்தடைகள் பேவர் பிளாக் கற்களை கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தனியாக அடையாளப்படுத்தப்படவில்லை. இதனால் இரவில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.