ADDED : ஜன 05, 2024 04:49 AM

இணைப்பு பாலத்தை பாதுகாக்க வேண்டும்
சோழவந்தான் வைகை தென்கரை இணைப்பு பாலத்தின் இருபுறமும் ஆலமரங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் பாலத்தின் உறுதிபாடு கேள்விகுறியாகிவிடும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கவுரிநாதன், தென்கரை.
ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி, தெற்கு மாரட்வீதியில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.-
- சுரேஷ்பாபு, தெற்குவாசல்.
ரோட்டோர கடைகளால் இடையூறு
மதுரை தெற்குவாசல் மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோர வியாபாரிகள் கடைகள் வைத்திருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பாலா, தெற்குவாசல்.
தெருநாய்கள் தொந்தரவு
மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் பிரித்தம் தெருவில் வெறிநாய்கள் உலா வருகின்றன. பலரை கடித்துள்ளன. அத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ஹரிஷ், துரைசாமி நகர்.
* மாநகராட்சி 13 வது வார்டு மகாலட்சுமிநகர்,கே.வி.ஆர். நகர், ஐலேண்ட் நகர்உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- -சுரேஷ், கே.வி.ஆர். நகர்.
ரோட்டில் கழிவுநீர்
மதுரை எச்.எம்.எஸ். காலனி நர்மதை தெருவில் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும் பலனில்லை.
-- ஸ்ரீதேவி, எச்.எம்.எஸ்.காலனி.