Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடும்பங்கள் கொண்டாடும் புத்தகத் திருவிழா

குடும்பங்கள் கொண்டாடும் புத்தகத் திருவிழா

குடும்பங்கள் கொண்டாடும் புத்தகத் திருவிழா

குடும்பங்கள் கொண்டாடும் புத்தகத் திருவிழா

ADDED : செப் 10, 2025 01:57 AM


Google News
Latest Tamil News

வாழ்வு வளமடைய

பு த்தக வாசிப்பே குழந்தைகள் மனதில் 'சொல் பூங்காவை' செழிப்பாக வளரச்செய்யும். சாதனையாளர்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை உடையவர்கள். பெற்றோர் வாசித்தால் தான் குழந்தைகளுக்கான வாசிப்பு சூழல் உருவாகும். வாசிப்பே வாழ்வை வளமடையச் செய்யும்.

- நந்தசிவம் புகழேந்தி, தொழில் முனைவோர், நத்தம்

அறிவுலகவாதிகளின் அட்சயபாத்திரம்

புத்தக கண்காட்சியில் மழலையர் தொடங்கி முதியவர்கள் வரை படிக்கும் நுால்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நுால்கள் பல இணைந்து ஆடையாவது போல பல நுால்கள் கற்று மேதையாவோர் பலர். 'அறிவுலகவாதிகளின் அட்சய பாத்திரங்கள்' நாம் நேசிக்கும் வாசிக்கும் புத்தகங்கள் தான் என்றால் மிகையல்ல.

- ஜான் பெலிக்ஸ் கென்னடி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர், மதுரை.

அரத்தமுள்ள வாழ்க்கைக்கு

முதல்முறையாக புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளேன். அலைபேசி பயன்பாட்டை குறைத்து தினமும் புத்தகம் வாசிப்பில் ஈடுபட குறிக்கோள் எடுத்துள்ளேன். தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தி ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் புத்தகங்களை அள்ளியுள்ளேன். எனக்குத் தெரிந்தவர்களையும் கண்டிப்பாக வாசிக்க துாண்டுவேன்.

- அபர்ணா, மதுரை.

வாசிப்பு ஒரு தியானம்

நான் 25 ஆண்டுகால தினமலர் வாசகி. தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தி 1000 ரூபாய்க்கு இலவசமாக புத்தகம் தேர்வு செய்துள்ளேன். வாசிப்பு ஒரு தியானம்; தினமும் அரைமணி நேரமாவது வாசித்தல் அவசியம். அடுத்த ஆண்டு இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க உள்ளேன்.

- மைதிலி, மதுரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us