/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பால் வாங்க 3 கி.மீ., நடை தற்காலிக பாதை தேவை பால் வாங்க 3 கி.மீ., நடை தற்காலிக பாதை தேவை
பால் வாங்க 3 கி.மீ., நடை தற்காலிக பாதை தேவை
பால் வாங்க 3 கி.மீ., நடை தற்காலிக பாதை தேவை
பால் வாங்க 3 கி.மீ., நடை தற்காலிக பாதை தேவை
ADDED : மே 27, 2025 01:07 AM
திருநகர்: மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை நீர், மழைநீர் செல்லும் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் உள்ளது.
திருநகரின் ஒரு பகுதியிலிருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜிநகர், ஹார்விபட்டிக்கு செல்வோரும், அங்கிருந்து திருநகர் செல்வோரும் இப்பாலத்தை பயன்படுத்தினர்.
இப்பாலம் சேதமடைந்ததால் ரூ. 15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி முடிய 2 மாதங்களாகும். அதுவரை பாலசுப்பிரமணியன் நகரிலிருந்து திருநகர் செல்வோரும், திருநகரிலிருந்து பாலசுப்ரமணிய நகர், பாலாஜி நகர் செல்வோரும் ஹார்விபட்டி வழியாக 3 கி.மீ., சுற்றிச் சென்று திரும்புகின்றனர். பாலசுப்பிரமணியன் நகரில் இருந்து 500 மீட்டர் துாரத்திலுள்ள 7வது பஸ் ஸ்டாப்பில் பால் வாங்கக்கூட 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது.
நடந்து செல்வோருக்காக அருகில் உள்ள தெரு வழியாக கால்வாய் மேல் தற்காலிக நடைபாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.