/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொலை வழக்கில் இளம்பெண் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது கொலை வழக்கில் இளம்பெண் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
கொலை வழக்கில் இளம்பெண் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
கொலை வழக்கில் இளம்பெண் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
கொலை வழக்கில் இளம்பெண் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
ADDED : மே 22, 2025 04:29 AM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை செல்லுாரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் 23. மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை செய்தார். இருநாட்களுக்கு முன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக செல்லுாரைச் சேர்ந்த அவினீஸ்வரன் 18, சகாயம் 18, சிவப்ரியா 18 மற்றும் 3 சிறுவர்களை மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான பின்னணி
2023ல் செல்லுார் பகுதி கோயில் திருவிழாவில் நடன நிகழ்ச்சியின்போது பிரதாப் என்பவருக்கும், தங்கப்பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. தங்கப்பாண்டியனின் டூவீலரை பிரதாப் எரித்தார். இதனால் இரண்டு ஆண்டுகளாக விரோதம் இருந்த நிலையில் பிரதாப்பின் காதலி சிவப்ரியாவை 'உன் ஆள ஒழுங்கா இருக்க சொல்லு' என தங்கப்பாண்டியனும், நண்பர் காட்டுப்பூச்சி என்ற ஆனந்தும் மிரட்டினர். இந்நிலையில் திருட்டு வழக்கில் பிரதாப் சிறைக்கு சென்றதற்கு இருவரும்தான் காரணம் என சிவப்ரியாவும், பிரதாப்பின் தம்பி நிரஞ்சனும் சந்தேகித்தனர்.
அதேசமயம் நிரஞ்சனை சந்தித்த இருவரும் 'உன் அண்ணன் ஜெயிலுக்கு போயிட்டான். ஒழுங்கா இரு. இல்லைனா முடிச்சிடுவோம்' என மிரட்டினர். அவர்கள் தன்னை முடிப்பதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் எனக்கருதி நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப்பூச்சியை தேடிச்சென்றார். அவரது வீட்டை சிவப்ரியா அடையாளம் காட்டினார். காட்டுப்பூச்சி மாட்டுத்தாவணியில் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் திசை திருப்பினர். அங்கு அவரை தேடிச்சென்றபோது தங்கப்பாண்டியன் இருந்ததால் அவரை வெட்டிக்கொலை செய்தனர். இவ்வாறு கூறினர்.