ADDED : ஜூன் 18, 2025 04:18 AM
மேலுார்: மேலுார் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமது யாசின், கமிஷனர் சக்திவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தை சுற்றி ரூ.20 லட்சத்தில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் அமைத்தல், பல்லவராயன்பட்டியில் ரூ. 6.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, 16 டிரை சைக்கிள் வாகனங்களை ரூ.2.79 லட்சத்தில் பழுது நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் முத்துக்குமார், கிளார்க் ஜோதி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.