ADDED : ஜூன் 18, 2025 04:26 AM
மதுரை: மதுரை மாவட்டம் எழுமலை அருகே டி.மேட்டுப்பட்டி பிரகாஷ்25. இவர் ஒரு வாகனத்தில் 810 கிலோ கஞ்சாவை 2022 ல் கடத்தியபோது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பின்புறம் செல்லும் நான்குவழிச் சாலையில் ஒத்தக்கடை போலீசார் கைப்பற்றினர்.
ஆந்திராவிலிருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து, நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் குணாவிடம்36, ஒப்படைத்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது உறுதியானது.
பிரகாஷ், மதுரை அவனியாபுரம் நிஷாந்தன்31, உசிலம்பட்டி கீழபுதுார் ஜெகதீசன் 43, குணா மீது ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. பிரகாஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.