Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

ADDED : செப் 10, 2025 03:23 AM


Google News
மதுரை:மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு தொடர்பாக பெண் உட்பட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சியில், 2022, 2023ல் தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, இரண்டு மாதங்களாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையில் விசாரணை நடக்கிறது.

இவ்வழக்கில், இதுவரை மேயரின் கணவர் பொன் வசந்த், உதவி கமிஷனர், முன்னாள் உதவி கமிஷனர், பில் கலெக்டர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என, 19 பேர் கைது செய்யப் பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர் லீமா ரோஸ் மேரி, 3வது மண்டல அலுவலக உதவியாளர் சங்கையா, 4வது மண்டல தற்காலிக பணியாளர் பிரேம், பில் கலெக்டர் ராஜ் குமார் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சிக்கு பிரதான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரான லோகேஷ் பிரபுவிடம் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடந்தது.

முறைகேடு புகார் காலத்தில், இவரது கட்டுப்பாட்டில் தான் மாநகராட்சியின் சர்வர், பாஸ்வேர்டு ஐ.டி.,க்கள் இருந்துள்ளன.

ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை.

இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us