/உள்ளூர் செய்திகள்/மதுரை/"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்
"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்
"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்
"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

மோடிக்கு எதையும் தாங்கும் இதயம்
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.
அ.தி.மு.க., தோல்வி
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. பிரதமர் மோடி எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.,விற்காக நான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.