/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள் 231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள்
231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள்
231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள்
231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள்
ADDED : செப் 13, 2025 04:29 AM

மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
குளிரூட்டப்பட்ட 231 ஸ்டால்களில் கதை, இலக்கியம், நன்னெறி, போட்டித் தேர்வு புத்தகங்கள் என அனைத்து வயதினர், வகையினருக்குமான லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியும், பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோர் அதிகளவில் பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர்.
செப். 15 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
முதலுதவி பயிற்சி இன்று (செப்.13) உலக முதலுதவி தினத்தையொட்டி இந்திய செஞ்சிலுவை சங்க மதுரை கிளை சார்பில் புத்தகத் திருவிழாவிற்கு வரும் வாசகர்கள், மாணவர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிப்பர். இதில் மாரடைப்பு, நாய்க்கடி, பாம்புக்கடி, சாலை விபத்து, தீவிபத்து, வலிப்பு, மயக்கம் போன்ற நெருக்கடியான நேரங்களில் செய்யக் கூடிய முதலுதவிகளை தெரிந்து கொள்ளலாம் என செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.