/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை கொரோனா வார்டில் 2 பேர் நேற்று 22 பேருக்கு காய்ச்சல் மதுரை கொரோனா வார்டில் 2 பேர் நேற்று 22 பேருக்கு காய்ச்சல்
மதுரை கொரோனா வார்டில் 2 பேர் நேற்று 22 பேருக்கு காய்ச்சல்
மதுரை கொரோனா வார்டில் 2 பேர் நேற்று 22 பேருக்கு காய்ச்சல்
மதுரை கொரோனா வார்டில் 2 பேர் நேற்று 22 பேருக்கு காய்ச்சல்
ADDED : ஜூன் 13, 2025 02:07 AM
மதுரை:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் நோயாளிகள் இருவர் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரையில் நேற்று 22 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு காய்ச்சல், கொரோனா தொற்று பதிவாகவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று 40 பேர் காய்ச்சலுக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். பிற மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 29 பேர் காய்ச்சலுக்கு உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர்.
மதுரையை சேர்ந்த 27 வயது பெண் சென்னை சென்ற போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 'ஆன்டிஜன்' பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல மதுரை தனியார் மருத்துவமனையில் மூச்சுதிணறலுடன் அனுமதிக்கப்பட்ட சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் உள்ள நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனை கொரானோ வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: இரு நோயாளிகளும் கொரோனா வார்டில் இருந்தாலும் நலமாக செயற்கை ஆக்சிஜன் இன்றி இயல்பாக சுவாசிக்கின்றனர். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவர். கொரோனா குறித்து பயப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருந்தால் போதும். மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வருவது நல்லது. சானிட்டைசர் கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும். கை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் பிற நோய் பாதிப்புள்ளவர்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். வெளியே செல்ல கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.