/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாள் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாள் மேம்பாட்டு பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாள் மேம்பாட்டு பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாள் மேம்பாட்டு பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாள் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 10, 2025 08:03 AM
மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உயராய்வு மையம் சார்பில் மாணவர்களுக்காக இரண்டு நாள் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். துறைத் தலைவர் காந்திதுரை வரவேற்றார். பயிற்சியின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சங்கீத் ராதா, பேராசிரியை அன்பரசி பேசினர்.
முதல் நாளில், 'பேச்சுத் திறன்' குறித்து செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, 'ஊடகத்திறன்' என்ற தலைப்பில் தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி. ரமேஷ்குமார், 'படைப்புத்திறன்' குறித்து எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார், 'தொழில் வளர்ச்சித் திறன்' தொடர்பாக எழுத்தாளர் அய்யனார் ஈடாடி பேசினர்.
இரண்டாம் நாளில், 'இணைய பயன்பாட்டுத்திறன்' குறித்து கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சத்யராஜ் தங்கச்சாமி, 'இளையோருக்கு அழகு தொழில் முனைவோராதல்' என்ற தலைப்பில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி உதவி பேராசிரியர் முனீஸ்மூர்த்தி, 'பணி மேம்பாட்டுத்திறன்' குறித்து மாவட்ட வள மைய பயிற்றுநர் பரணிதரன் ஆகியோர் பேசினர். ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சங்கீத் ராதா செய்தார்.