ADDED : ஜூன் 03, 2025 01:01 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பலசரக்கு கடை ஊழியர் குருபாலன் 53. இவரது மனைவி சரஸ்வதி 45.
நேற்று காலை குருபாலன் வேலைக்கு சென்ற நிலையில் சரஸ்வதியும் அவரது மகனும் மதுரையில் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றனர்.
மதியம் வீட்டிற்கு வந்த குருபாலன் சாப்பிட்டு விட்டு கதவை பூட்டி சாவியை கதவுக்கு அருகில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து சென்றுள்ளார். இதை கவனித்த மர்ம நபர்கள் கதவை திறந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்றனர். திருமங்கலம் நகர் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.