ADDED : ஜூன் 17, 2025 06:51 AM
மதுரை; சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரையில் நேற்று 15 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அரசு, தனியார் மருத்துவமனை வார்டுகளில் 33 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் 14 குழந்தைகள் உட்பட 38 பேர் புறநோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சல் பாதித்த இளம்பெண் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளார். புதிதாக டெங்கு காய்ச்சல்,கொரோனா தொற்று பதிவாகவில்லை.