ADDED : செப் 15, 2025 04:35 AM
திருநகர்: திருநகரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2 வார்டுகளில் அளித்த 1416 மனுக்களில், 802 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி மேற்கு மண்டலம் 94, 95 வார்டு மக்களுக்காக திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் தாசில்தார்கள் கவிதா, இதயகமலம், துணைத் தாசில்தார் ராஜராஜேஸ்வரி தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஆர்.ஐ.,க்கள் திருக் கண்ணன், ரங்கநாயகி, 19 வி.ஏ.ஒ., க்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளிலும் மக்கள் மனு கொடுத்தனர். மகளிர் உரிமை தொகைக்கு அடுத்து 419 பேர் வருவாய்த்துறை தொடர்பான மனு அளித்தனர். முகாமை மேயர் இந்திராணி பார்வையிட்டார்.