13 ஆயிரம் பட்டா: அமைச்சர் பெருமிதம்
13 ஆயிரம் பட்டா: அமைச்சர் பெருமிதம்
13 ஆயிரம் பட்டா: அமைச்சர் பெருமிதம்
ADDED : மார் 23, 2025 04:03 AM
மதுரை : அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து 36 புதிய பஸ்களை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு, பொது மேலாளர் மணி, துணை மேயர் நாகராஜன் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மதுரைக்கு 100 பஸ்கள் ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக 36 பஸ்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் விரைவில் வந்து மதுரைக்கான புதிய திட்டங்களை தெரிவிப்பார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கிராமம் நத்தமாக, புறம்போக்கு இடமாக இருந்தால் அங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்கப்படும். நீர்நிலை, ஓடை, கண்மாய் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்கப்படாது.
மதுரையில் 13 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.