/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 10 சுவாமி சிலைகள் உடைப்பு;: மர்ம நபர்கள் வெறிச்செயல் 10 சுவாமி சிலைகள் உடைப்பு;: மர்ம நபர்கள் வெறிச்செயல்
10 சுவாமி சிலைகள் உடைப்பு;: மர்ம நபர்கள் வெறிச்செயல்
10 சுவாமி சிலைகள் உடைப்பு;: மர்ம நபர்கள் வெறிச்செயல்
10 சுவாமி சிலைகள் உடைப்பு;: மர்ம நபர்கள் வெறிச்செயல்
ADDED : மே 24, 2025 09:28 PM

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கோயில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
திருமங்கலம் நகராட்சி பகுதிக்குட்பட்ட குதிரைச்சாரிபுரம் பழனியாபுரத்தில், ஏழு பேர் சுவாமி கோயில் உள்ளது.
இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஏழு பேர் பங்காளிகள் சுவாமி கும்பிட்டு வருகின்றனர். இந்த வளாகத்தில் அய்யர் சாமி, பெரிய கருப்புசாமி, சன்னாசி சாமி, மாயாண்டி சுவாமி, ராக்காச்சி அம்மன், சின்னச்சாமி, ஆண்டி சாமி என 20க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த கோயில் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அனைத்து சுவாமி சிலைகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி துண்டு துண்டாக உடைக்க முயற்சித்துள்ளனர்.
இதில் அய்யர் சாமி, அம்மன் சிலைகளின் தலை பகுதி சேதமானது. ஆண்டி சாமி சிலை இரண்டாக உடைக்கப்பட்டு பீடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டிருந்தது.
பிற சுவாமி சிலைகளின் வலது கரங்கள் மட்டும் குறிப்பாக உடைக்கப்பட்டு துண்டாகப்பட்டுள்ளன.
இப்படி 10 சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.
கோயில் வளாகத்தில் இருந்த மணி உள்ளிட்டவைகளும் திருடு போயிருந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தனர்.
ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர், போலீசார் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர். தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.
அருகில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.