/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் : செல்லுார் ராஜூ கூறுகிறார் 2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் : செல்லுார் ராஜூ கூறுகிறார்
2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் : செல்லுார் ராஜூ கூறுகிறார்
2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் : செல்லுார் ராஜூ கூறுகிறார்
2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் : செல்லுார் ராஜூ கூறுகிறார்
ADDED : ஜூலை 18, 2024 06:20 AM
மதுரை : '2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள்' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார்.
மதுரையில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவதால் நடைபயிற்சிக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை வானளாவ புகழ்ந்து ஓட்டு கேட்டோம். ஆனால் மக்கள் சட்டசபைக்கு ஒரு பார்வை, லோக்சபாவுக்கு ஒரு பார்வை என ஓட்டளித்துள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோதும் அ.தி.மு.க., தலைமை தோல்வியை சந்தித்துள்ளது. லோக்சபா களம் வேறு. இந்த முடிவுகள் இறுதியல்ல. காலம் மாறும். அ.தி.மு.க., மீண்டும் அரியணை ஏறும். பழனிசாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் எழுந்தபோது நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். 2026ல் பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள் என்றார்.
சசிகலாவின் சுற்றுப்பயணம், அ.தி.மு.க., ஒன்றிணைவது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு 'வெயிட் அன்ட் ஸீ' என பதிலளித்தார்.