அமைப்புகள்
தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையம் சார்பில் கப்பலுார் டோல்கேட் ஊழியர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் கூறுகையில், 'தமிழகத்தில் 3 லட்சம் பேர் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சி செய்தனர்' என்றார். மதுரை தீஷா யோகா அறக்கட்டளை சார்பில் கே.கே.ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் உலக உருண்டையை வைத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு ஆசனங்கள் செய்தனர். செயலாளர் கார்த்திக் ஏற்பாடுகள் செய்தார்.
பள்ளி, கல்லுாரி
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் ராமலிங்கம் யோகா தினத்தின் முக்கியத்துவம், நன்மை குறித்து பேசினார். உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன், மொழியியல் துறைப் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
உசிலம்பட்டி-
எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பெருமாள், விஜயகுமார், பிரபு பயிற்சி அளித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்ருதீன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சேகர்சிவகுரு, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.